உச்சியை தொட்டவரில் ஒருவரும் சொன்னதில்லை
நான் ஏறி வந்த படிகளிலே இனிமை உள்ளதென்று

பிள்ளையை பெற்ற தாயில் ஒருவரும் சொன்னதில்லை
இவனை பெற்றதிலே வலி கண்டதில்லை என்று

சிங்கமாய் இருந்தாலும் உணவு தட்டில் கிடைப்பதில்லை
சிறு கல்லும் இங்கேதான் தட்டாமல் நகர்வதில்லை

உச்சியில் ஒரு கல் வைத்தால் அது கோபுரம் ஆகாது
முன்னே ஒரு கால் வைத்தால் அதோடு பயணங்கள் முடியாது

நேற்றைக்கு கண்ட கனவு எழுந்தவுடன் பலிக்காது
இன்றைய கனவும்தான் உறங்காமல் தொடங்காது

அதிசயத்தை நம்பி இங்கே ஆவது காரியமில்லை
அடி ஒன்றில் நிறுத்திவிட்டால் அம்மியும் நகர்வதில்லை

தட்டவும் கட்டவும் எண் இரண்டு கைகள் உண்டு
அங்கேயும் இங்கேயும் ஓடுகின்ற கால்கள் உண்டு

இரண்டும் இல்லா முடம் உண்டு, அவரிடம்
புகழ் நிறைந்த வாழ்வுண்டு

இரண்டும் உள்ள ஜடம் உண்டு, அவரிடமும்
பெயருக்கென்றோர் வாழ்வுண்டு

0 comments:

Newer Post Home